இம்முறை ஜனாதிபதி தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரையில் வாக்களிக்கலாமெனவும் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு வெளியிடப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன்று முற்பகல் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை அடுத்தே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். வாக்குச்சீட்டும் வழமைக்கு மாறாக மிக நீளமாக இருப்பதால் வாக்காளர்களுக்கு இலகுவாகும் விதத்தில் வாக்களிப்பதற்கான நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளது. முன்னர் நடைபெற்ற தேர்தல்களில் காலை 7 மணி முதல் மாலை 4 வரையில் வாக்களிப்பதற்கான நேரம் வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி காலை 7 மணி தொடக்கம் மாலை 5 மணி வரை வாக்களிப்பு நடைபெறும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க தெரிவித்தார்.

No comments: