News Just In

10/06/2019 03:16:00 PM

கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் 22 பேர் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி


இன்று வெளியான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரியைச் சேர்ந்த 22 மாணவிகள் சித்தி பெற்றுள்ளதாக கல்லூரி அதிபர் தெரிவித்தார்.

பாடசாலையில் அதிகூடிய புள்ளியாக 171 புள்ளிகளை  செல்வி ஸ்ரீஹர்ணி  குகராஜ் பெற்றுள்ளார். மேலும் 100 புள்ளிகளுக்கு மேல் 48 மாணவிகளும், 70 புள்ளிகளுக்கு மேல் 8 மாணவிகளும் பெற்றுள்ளனர். 

கடந்த வருடம் இடம்பெற்ற தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில்  கல்லடி உப்போடை விவேகானந்தா மகளிர் கல்லூரி மாணவிகள் 12 பேர்  சித்தி பெற்றமை குறிப்பிடத்தக்கது. பாடசாலை வரலாற்றில் அதிகளவு மாணவிகள்   சித்தி பெற்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும். 

No comments: