News Just In

10/06/2019 09:29:00 PM

மட்டக்களப்பு கரவெட்டி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த உற்சவ சடங்கு -2019

உற்சவ ஆரம்பம் : 2019.10.04 
உற்சவ நிறைவு : 2019.10.13 பூரணை திதி

ஆலய சிறப்பு மற்றும் அருள் கொடுக்கும் திறம்
அன்னை கரவெட்டி ஶ்ரீ பத்திர காளி அம்மன் ஆலயம் இப்பிரதேசத்தின் ஆலயங்கள் எல்லா வற்றிலும் சிறப்பு வாய்ந்த து .மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் பல கோயில்கள் இருக்கின்ற போதிலும் எமது அன்னையின் ஆலயமே மிகவும் சிறப்பு வாய்ந்து விளங்குகின்றது. 

ஆலயம் சிறப்பு வாய்ந்தது என்பதற்கு கீழ்வரும் விடயங்களை ஆதாரமாக காட்ட முடியும்.
  • அன்னை அமைந்திருக்கும் இடம்
  • அருள் பெறும் அடியவர்கள் கூற்று
  • உற்சவ காலங்களில் வருகை தரும் அடியவர்களின் எண்ணிக்கை
  •  நேர்த்திக்கடன்களின் எண்ணிக்கை
  • ஆலய உற்சவ கால தேவாதிகளின் வாக்குப் பலிதம்
  • சக்தி உபாசகர்களின் பங்கேற்பு 
போன்ற விடயங்களை வைத்து என்னால் இவ்வன்னையின் திறத்தை விபரிக்க முடியும். 

அன்னை அமைந்திருக்கும் இடம்
கரவெட்டி ஶ்ரீ பத்திரகாளி அம்பாள் இருப்பிடமாக அழகிய அமைதியான காடருகினை இவர்ந்திருக்கின்றாள். 

அந்த இடத்தில் இருந்தாலே நோய் இருந்த இடம் தெரியாமல் ஓடிவிடும். வீசு கின்ற காற்றில் பட்டு வரும் அன்னையின் அருள், நோய் தீர்க்கும் மூலிகையாக இதம் தருகின்றது.கரவெட்டி ஒரு பழம் பதி இங்கு அன்னை கோயில் கொண்டிருப்பது இன்னும் சிறப்பு. இங்குள்ளவர்கள் நோய்வந்து துவண்டதில்லை. பாயில் சோம்பேறிகளாக இவர்கள் படுத்ததில்லை இத்தனைக்கும் அன்னையின் அருளே காரணமாகும். பனைகள் அங்கு கூடி நின்று அன்னையின் அருளை உயரத்திற்கு சொல்லும். 

அருள் பெற்ற அடியவர்களின் கூற்று
நான் எனது வயதிற்கு எட்டியவர்களிடமும் என்னை விட வயதில் கூடியவர்களிடமும் இன்னும் உள்ள இளையவர்களிடமும் பல தடவைகள் பேசி பார்த்திருக்கின்றேன்.அம்பாளின் அருள் திறத்தை பற்றி அவர்கள் அனைவரினதும் கூற்று அன்னையின் அருட் திறத்தை செப்பிட தவறவில்லை. தாம் அனைவரும் தாம் கண்ட வற்றை மற்றும் அவரவர் உறவுகள் கூறியவற்றையும் என்னிடம் கதைத்திருக்கின்றார்கள். நிச்சயமாக கூற முடியும் அவர்கள் அனைவரும் உண்மையைத்தான் கூறுகின்றார்கள்.அவர்களுக்கு வந்த அனைத்து கஸ்டங்களையும் இருந்த இடம் தெரியாமல் செய்த்து வைத்தது அன்னை ஶ்ரீ பத்திரகாளி என்றால் மிகையில்லை. தீராத நோய் பிடித்தவர்கள் அந்நோய் நீக்கப் பெற்றிருக்கின்றார்கள். குழந்தைப் பாக்கியம் இல்லாதிருந்தவர்கள் மழலைகளை அம்பாள் அருளால் பெற்றிருக்கின்றார்கள்.திருமணமாகாத வர்களின் குறைகளை இவ்வன்னை அகற்றி அவர்களுக்கு மாங்கல்ய பாக்கியத்தை வழங்கி மகிழ்ச்சிப் படுத்தியிருக்கின்றாள்.குழந்தை பாக்கியம் கேட்டவர்களுக்கு அதனை வழங்கி பெற்றோராக்கி மகிழ்வித்திருக்கின்றாள். 

உற்சவ காலங்களில் வருகை தரும் அடியவர்களின் எண்ணிக்கை
அம்பாள் கரவெட்டி ஶ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திற்கு அளவு கடந்து பக்தர்கள் வருடா வருடம் வருகை தருகின்றார்கள். இலங்கையின் பல பகுதிகளிலிருந்தும் அடியவர்கள் வருகை தருவது அன்னையின் அருட் திறத்தை கட்டியம் கூறும். வந்த அடியவர்கள் அனைவரும் ஆலயத்தில் தரித்து செல்கின்றமை மிகச்சிறப்பு. 

நேர்த்திக்கடன்களின் எண்ணிக்கை
அடியவர்கள் தாம் நினைத்தவை நடந்தேற நினைத்து நேர்த்தி வைக்கின்ற மரபு எமது மதத்திற்கே உரிய ஒருவிடயம். 

இதன்படி எமது அன்னையின் ஆலயத்தில் வந்து சேர்கின்ற நேர்த்திக் கடன்களின் எண்ணிக்கை எண்ணிறந்தவை.இது எமதன்னை உன்னத வரம் தரும் திறங்கொண்டாள் என்பதை பறை சாற்றுகின்றன. 

தேவாதிகளின் வாக்குப் பலிதம்
அதிகளவான தேவாதிகள் இவ்வாலய திருவிழாக் காலங்களில் அன்னை பணி செய்கின்றனர். இவர்கள் அனைவரும் அம்பாளுக்கு உண்மையானவர்களாக பக்தியில் சிறந்தவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் இவ்வாலயம் வரும் அடியவர்களுக்கு வாக்குச் சொல்லுகின்றார்கள் .அனைத்தும் பலிக்கின்றன. மக்கள் இவர்களை மிக மிக நம்புகின்றார்கள். “ நம்பினார் கெடுவதில்லை “ என்ற வாக்கிற்கு ஏற்ப அவர்கள் முழு பக்தியுடையவர்களாக மிளிர்கின்றார்கள்.”அம்பிகையைச் சரண்புகுந்தால் அதிக வரம் பெறலாம்” என்று இவர்கள் தைரியப்படுகின்றார்கள். 

சக்தி உபாசகர்களின் பங்கேற்பு
இங்கு மிகத்திறமையாக பத்தாதிகளை துறை போக கற்ற சக்தி உபாசகர்கள் தமது பணியினை அன்னைக்கு ஆற்றுகின்றார்கள் 

இவர்கள் சந்ததி வழி வருபவர்கள் திறமையானவர்கள். இளையவர்கள் சக்தி உபாசகர்களாக இருப்பதோடு தமது கல்விப் புலத்தில் மிகவும் உயர்ந்தும் விளங்குவது அன்னையின் அருட் திறமே. 

ஆக்கம்
மேகராசா சண்முகராசா (கரவெட்டி)
ஆசிரியர்
06.10.2019 






















No comments: