மேல் சபரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்றைய தினம் மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
மத்திய, சபரகமுவ மாகாணங்கள் காலி மாத்தறை களுத்துறை மாவட்டங்களின் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையில் கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஹம்பாந்தொடை தொடக்கம் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கடற் பிரதேசங்கள், புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக முல்லைத்தீவு வரை பல பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 - 80 கிலோ மீட்டர் வேகத்தில் வீச கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: