நூருல் ஹுதா உமர்
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான பாடசாலை கவின்கலைப் போட்டிகள், பாடசாலை வளாகத்தில் பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம்.றிசாத் தலைமையில் சிறப்பாக நடைபெற்றன.
இந்நிகழ்வில், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரும் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான யூ.எல். றியால் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு போட்டிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார். மாணவர்களின் கலை, கலாசார மற்றும் படைப்பாற்றல் திறன்களை ஊக்குவித்து வெளிக்கொணரும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்போட்டிகளில், தரம் 6 முதல் தரம் 12 வரை கல்வி கற்கும் ஏராளமான மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்று, ஓவியம், கைவினை மற்றும் பல்வேறு படைப்பாற்றல் நிகழ்வுகள் மூலம் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளுக்கான நடுவர்களாக அழகியற்கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.எம். சியாம், வலயக்கல்வி அலுவகத்தின் பாடசாலைக்கான இணைப்பாளர் எம்.தையீப் மற்றும் ஆசிரிய ஆலோசகர் ஐ.எம்.மௌசூர் ஆகியோர் கடமையாற்றி, போட்டியாளர்களின் ஆக்கங்களை நடுநிலையுடன் மதிப்பீடு செய்தனர்.
இந்நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதற்காக கவின்கலைப் போட்டிகளின் திட்ட இணைப்பாளர்களான ஆசிரியர்கள் எம்.சி. ஹிஜாஸ் மற்றும் ஏ.ஆர். பைறூஸ்கான் ஆகியோர், ஏனைய ஆசிரியர்களுடன் இணைந்து போட்டிகளுக்கான ஒழுங்கமைப்பு மற்றும் மாணவர்களுக்கான வழிகாட்டல்களை அர்ப்பணிப்புடன் மேற்கொண்டிருந்தனர்.
மாணவர்களின் மறைந்துள்ள ஆற்றல்களை வெளிக்கொணரவும், கலை மற்றும் கலாசாரத்திற்கான ஆர்வத்தை மேம்படுத்தவும் இவ்வாறான போட்டிகள் முக்கிய பங்காற்றுகின்றன என நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கப்பட்டது
No comments: