News Just In

7/16/2026 03:52:00 PM

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்!

நிந்தவூர் பிரதேசத்தில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்


நூருல் ஹுதா உமர்

நிந்தவூர் மத்திய வட்டாரத்தை உள்ளடக்கிய நிந்தவூர் 03 மற்றும் 15ஆம் பிரிவுகளில், டெங்கு நுளம்பு பெருக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (16.07.2026) விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம், நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம் அப்துல் லத்தீப், மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை, பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார உத்தியோகத்தர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் நிந்தவூர் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இணைந்து செயற்பட்டனர்.

இதன்போது, டெங்கு நுளம்பு பெருக்கம் ஏற்படக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டதுடன், வீடுகள் மற்றும் பொது இடங்களைச் சுற்றியுள்ள நீர் தேங்கும் பாத்திரங்கள், பயன்படுத்தப்படாத பொருட்கள் மற்றும் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டன. மேலும், பொதுமக்களுக்கிடையில் டெங்கு நோய் தடுப்பு தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.

எனவே, தமது சுற்றுப்புறங்களை சுத்தமாக பேணுவதிலும், நீர் தேங்கக்கூடிய இடங்களை அகற்றுவதிலும் பொதுமக்கள் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.


No comments: