
கிழக்கு மாகாணத்தில் நிலவும் தொடர்ச்சியான அதிக வெப்பம் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் தற்போது விவசாய நடவடிக்கைகளும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக நிலவி வரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் கால்நடையாக செல்வதை தவிர்த்து முச்சக்கர வண்டிகளில் பயணிப்பதை காண முடிகின்றது
இதே வேளை விவசாய நடவடிக்கைகளின் போது பயன் தரும் மா மரம் மற்றும் தென்னை வெற்றிலை செய்கை இலைக்கறி வகைகள் போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன் கால்நடைகளுக்கு வேண்டிய புற்களும் தற்போது கருகிய நிலையில் காணப்படுகின்றது
தென்னை மரத்தின் குரும்பட்டிகளும் தற்போது கருகி வருவதை காண முடிகின்றது இதேவேளை பொதுமக்கள் நீர்நிலை மற்றும் நிழல் பகுதிகளை அதிகம் நாடி வருவதுடன் தொடர்ச்சியான வெப்பநிலை காரணமாக சிறியவர்கள் வயோதிபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று நண்பகள் வேலை நகரின் முக்கியமான பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது
No comments: