News Just In

3/20/2026 02:48:00 PM

கல்முனை தமிழ் கோட்ட விளையாட்டு விழா கோலாகலமாக ஆரம்பம்

கல்முனை தமிழ் கோட்ட விளையாட்டு விழா கோலாகலமாக ஆரம்பம்
 

நூருல் ஹுதா உமர்

கல்முனை தமிழ் கோட்டத்திற்குட்பட்ட 14 பாடசாலைகள் பங்கேற்கும் கோட்ட மட்ட விளையாட்டு நிகழ்வுகள் வியாழக்கிழமை (19.03.2026) கல்முனை கார்மேல் பத்திமா தேசிய பாடசாலை மைதானத்தில் கல்முனை தமிழ் கோட்ட பணிப்பாளர் எஸ். சுரேஷ் தலைமையில் சிறப்பாக ஆரம்பமானது.

இவ்விழாவின் ஆரம்ப நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளர் எம்.எல்.எம். முதாரிஸ் கோட்டக் கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

விழா ஆரம்ப நிகழ்ச்சிகள் அணிவகுப்பு, கொடி ஏற்றுதல் உள்ளிட்ட நிகழ்வுகளுடன் உற்சாகமாக நடைபெற்றதுடன், மாணவர்களின் விளையாட்டு திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு போட்டிகளும் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறவுள்ளன.

இவ்விளையாட்டு விழா, மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, ஒற்றுமை, ஒழுக்கம் மற்றும் போட்டித்திறனை வளர்க்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.

No comments: