இன்றையதினம் பாராளுமன்ற கேள்வி பதிலின் போது 19.02.2026..! வீடமைப்பு,நிர்மாணிப்பு நீர் வளங்கள் அமைச்சருக்கான இரண்டாம் கேள்வியானது .
எம்மால் முன்மொழியப்பட்ட குடிநீருக்கான பல திட்டங்கள் பாரிய செலவுடைய திட்டம் அல்ல; சிறு திட்டங்களாகவே உள்ளது. அதே நேரத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் முந்தனை ஆறு திட்டம், ரூகம்–கித்துள் இணைப்பு திட்டம், வாளச்சேனை திட்டம் போன்ற பெரிய அளவிலான திட்டங்களும் நிலவுகின்றன.
இவ் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டாலே எமது மாவட்டத்தின் நீர்விநியோகப் பிரச்சனைகள் முழுமையாக தீர்க்க முடியும். ஆனால் தற்போதைய நிலவரப்படி, மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டு மாவட்ட பொறியாளர்கள் மட்டுமே உள்ளனர்; இதற்கான சிறப்பு தேர்ச்சி பெற்ற தனித்த வடிவமைப்பு (Design) குழு இல்லை. இதனால் புதிய திட்டங்களுக்கான வடிவமைப்பு பணிகளை வெளி மாவட்டங்களிலிருந்து மேற்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதுவே திட்டங்கள் தாமதமாகுவதற்கான முக்கிய காரணமாகும். எனவே, என் இரண்டாவது கேள்வி என்னவெனில் — மட்டக்களப்பு மாவட்டத்திற்கென ஒரு புதிய வடிவமைப்பு குழுவை அமைத்து, தேவையான பணியாளர்களை நியமிக்க முடியுமா? அல்லது தற்காலிகமாக மற்றொரு மாவட்டத்திலிருந்து ஒரு வடிவமைப்பு குழுவை நியமித்து எங்கள் மாவட்டத்திற்கு உதவ முடியுமா? இவ்வாறு நடவடிக்கை எடுத்தால், நீங்கள் முன்வைத்த மேலதிக நீர்விநியோகத் திட்டங்களை விரைவாக செயல்படுத்துவது சாத்தியமாகும்.
No comments: