News Just In

2/20/2026 09:51:00 AM

சம்மாந்துறை பிரதேச சபை மின்சார பிரிவுக்கு நவீன உபகரணங்கள் !

 சம்மாந்துறை பிரதேச சபை மின்சார பிரிவுக்கு நவீன உபகரணங்கள் !



நூருல் ஹுதா உமர்

சம்மாந்துறை பிரதேச சபையின் மின்சாரப் பிரிவை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்தை உயர்த்தும் நோக்கில் மின்சார ஊழியர்களுக்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வு பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுடன், மின்சாரப் பிரிவு ஊழியர்களிடம் உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டன.

மின்சாரப் பணிகளை விரைவாகவும் திறம்படவும் மேற்கொள்ள தேவையான நவீன கருவிகள், பாதுகாப்பு தொப்பிகள், கையுறை உள்ளிட்ட அவசியமான பாதுகாப்பு சாதனங்களும் இதன் மூலம் வழங்கப்பட்டது.

பொதுமக்களுக்கு விரைவான மற்றும் பயனுள்ள சேவையை வழங்குவதற்காகவே இவ்வுபகரணங்கள் வழங்கப்படுவதாக தவிசாளர் குறிப்பிட்டார். மேலும், மின்சாரப் பணிகளில் ஈடுபடும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு சேவையின் திறனை அதிகரிப்பதிலும் இந்நடவடிக்கை முக்கிய பங்கு வகிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வு, பிரதேச சபையின் சேவை மேம்பாட்டு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.

No comments: