News Just In

2/20/2026 09:45:00 AM

எனது நீண்ட கால கோரிக்கைக்கு இணங்க மட்டக்களப்பின் பல பகுதிகளில் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் ..!இரா .சாணக்கியன்

எனது நீண்ட கால கோரிக்கைக்கு இணங்க மட்டக்களப்பின் பல பகுதிகளில் குடிநீர் விநியோக நடவடிக்கைகள் ..!




 பாராளுமன்ற கேள்வி பதிலின் போது 19.02.2026..! வீடமைப்பு,நிர்மாணிப்பு நீர் வளங்கள் அமைச்சருக்கான முதல் கேள்வியானது .
மட்டக்களப்பு மாவட்டத்தில், போரதீவுப்பற்று பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காக்கட்சி வட்டை, விளாந் தோட்டம் , திக்கோடை–தும்பாளை மற்றும் மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுகளுட்பட்ட கிராமங்கள் கிரான்குளம் மற்றும் தர்மபுரம் ஆகிய பிரதேசங்களுக்கு மக்களுக்கான குடிநீரை வழங்க வேண்டும் என்பதாக இருந்தது .

அரசாங்கம் எமது கோரிக்கைக்கு இணங்க கடந்த ஆண்டு நீர் வளங்கள் அதிகார சபை மூலம் 14 கிலோ மீட்டரும், TD திட்டம் மூலம் 8 கிலோமீட்டரும் நிறைவேற்றியமைக்கு இந்த இடத்தில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், இந்த ஆண்டில் ஆரம்ப கட்டமாக கொக்கட்டிச்சோலை பகுதியில் 10 கிலோமீட்டர், களுவாஞ்சிக்குடியில் 13 கிலோமீட்டர், மண்டூரில் 11 கிலோமீட்டர் என மொத்தம் 42 கிலோமீட்டர் திட்டங்களையும், மேலும் நீர் வளங்கள் அதிகார சபை மூலம் 12 கிலோமீட்டர் நீர்வழங்கல் பணிகளையும் மேற்கொள்ள இணங்கியுள்ளீர்கள். இதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால், கௌரவ அமைச்சரவர்களே, நீங்கள் வழங்கிய தகவல்களில் சில பிழைகள் இருப்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். குறிப்பாக காக்காச்சிவட்டம் பிரதேசத்தில் உள்ள புளியடி, நெல்லிக்காடு, பாலையடி வட்டை, 37ஆம் மற்றும் 38ஆம் கிராமங்கள், வால்கட்டு, வாதகல் மடு, பன்சேனை போன்ற பல கிராமங்களில் நீர் விநியோகத்தில் இன்னும் சிக்கல்கள் நிலவுகின்றன. இந்தப் பகுதிகளுக்கு நீர் வழங்குவது தொடர்பான முக்கிய பிரச்சனை என்னவெனில், அம்பாறை மாவட்டத்திலிருந்தே நீர் வழங்கப்பட வேண்டிய நிலைமை உள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்வழங்கல் அமைப்பிலிருந்து அந்தப் பகுதிகளுக்கு இணைப்பு வழங்க இயலாது. இதனை கருத்தில் கொண்டு, மாற்று வழியாக மண்டூரில் உள்ள நீர் வளங்கள் அதிகார சபை அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் புதிய பேக்கேஜ் அடிப்படையிலான இணைப்பு முறைமையை உருவாக்குவதற்கான முன்மொழிவை நாங்கள் வைத்துள்ளோம். அந்த நிலத்தை வழங்க பிரதேச செயலாளர் ஏற்கனவே இணங்கியுள்ளார். அதற்கமைய எமது மக்களுக்கு அவசியமிக்க குடி நீருக்கான வசதியினை முதல் இரண்டாம் கட்டம் என இங்கு குறிப்பிடாத மட்டக்களப்பின் தேவையுள்ள ஏனைய பகுதிகளுக்கும் மிக விரைவில் ஏற்படுத்தி தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்

No comments: