News Just In

2/21/2026 05:32:00 PM

மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்

மட்டக்களப்பில் துயரத்தை ஏற்படுத்திய இளம் மருத்துவர் மரணம்




மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சிறுவர் விடுதியில் மருத்துவராக பணியாற்றி வந்த 31 வயதான மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி MBBS திடீர் மரணம் மட்டக்களப்பு மக்களுக்கு பெரும் துயரத்தை ஏறடுத்தியுள்ளது.

மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி சுகவீனம் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் (20) உயிரிழந்துள்ளார் .

அம்பாறை காரதீவை பிறப்பிடமாக கொண்ட மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி மட்டக்களப்பு அரசடியில் வசித்து வந்துள்ள நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் சேவையாற்றி வந்துள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் மருத்துவ படிப்பை நிறைவு செய்து பின் நாவலப்பிட்டிய வைத்தியசாலையில் கடமையாற்றி பின் மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றிவந்த திறமையான ஒரு மருத்துவர் ஆவார்.

இந்நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இளம் மருத்துவரின் திடீர் மரணம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் இஅரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

No comments: