யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வாகனம் விபத்துக்குள்ளானமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சாரதிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்ல சாரதிக்கு, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன
சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 27 ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
இந்தநிலையில் விபத்தின் போது காயமடைந்த 44 வயது தந்தையும், அவரின் 10 வயது மகனும் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்போது காயமடைந்த 14 வயது மகள், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மேலதிக சிகிச்சைகளுக்கான அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றர்.
முன்னதாக, யாழ்ப்பாணம் மீசாலை பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த உந்துருளி மீது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரனின் வாகனம் மோதி நேற்று விபத்து இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments: