News Just In

2/01/2026 06:01:00 PM

ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தைப் பயங்கரவாத குழுக்களாக அறிவிக்க ஈரான் முடிவு!

ஐரோப்பிய ஒன்றிய இராணுவத்தைப் பயங்கரவாத குழுக்களாக அறிவிக்க ஈரான் முடிவு



ஈரானின் புரட்சிகர காவல்படையை பயங்கரவாத குழுவாக அறிவித்ததற்கு பதிலடியாக, ஐரோப்பிய நாடுகளின் இராணுவத்தை பயங்கரவாத குழுக்களாக அறிவிக்க அந்த நாடு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கர் கலிபாஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். கடந்த வியாழக்கிழமை, புரட்சிகர காவல்படையை ஒரு பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதன் மூலம்,

ஈரானின் தலைமைத்துவத்திற்கான அணுகுமுறையில் ஐரோப்பிய ஒன்றியம் ஒரு அடையாள மாற்றத்தைக் குறித்தது. 1979 ஆம் ஆண்டு தற்போதைய மத அடிப்படையிலான ஆட்சி நிறுவப்பட்டதிலிருந்து ஈரான் கண்ட மிக மோசமான போராட்டங்களை ஒடுக்கியதைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இந்த நிலையில், புரட்சிகர காவல்படை மீதான நடவடிக்கையின் மூலமாக ஐரோப்பிய ஒன்றியம் உண்மையில் தங்களைத் தாங்களே காலில் சுட்டுக் கொண்டு, மீண்டும் ஒருமுறை அமெரிக்கர்களுக்குக் கண்மூடித்தனமாகக் கீழ்ப்படிந்து தங்கள் மக்களின் நலன்களுக்கு எதிரான முடிவை எடுத்துள்ளது என்றே சக நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் சபாநாயகர் முகமது பக்கர் கலிபாஃப் தெரிவித்துள்ளார்.

கூட்டத்தின் போது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கலும் புரட்சிகர காவல்படையினரின் சீருடையில் காட்சியளித்தனர். புரட்சிகர காவல்படையை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு எதிரான எதிர் நடவடிக்கைகள் குறித்த சட்டத்தின் பிரிவு 7 இன் படி, ஐரோப்பிய நாடுகளின் இராணுவம் பயங்கரவாத குழுக்களாகக் கருதப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் இராணுவ இணைப்புகளை வெளியேற்றுவது குறித்து தேசிய பாதுகாப்பு நாடாளுமன்ற ஆணையம் முடிவு செய்து, வெளிவிவகார அமைச்சகத்துடன் இந்தப் பிரச்சினையை முன்னெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

1979 ஆம் ஆண்டு ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஷியா மதகுருமார் ஆட்சி முறையைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட புரட்சிகர காவல்படை, நாட்டில் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது, பொருளாதாரம் மற்றும் ஆயுதப் படைகளின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: