இந்த அரசாங்கம் அரசியலமைப்பிற்கு ஏற்ப செயற்படுவது உண்மையெனில் இவ்வாண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் அது அரசாங்கத்தின் தொடர்ச்சியான பயணத்துக்கு சிறந்த பாதையல்ல என பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையிலான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவை சரியான முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனவே வெளிநபர்களின் தலையீடுகள் தவிர்க்கப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அத்தியாவசியமானதாகும்.
எவ்வாறிருப்பினும் பொறுத்தமான நேரத்தில் இந்த இரு கட்சிகளும் உத்தியோகபூர்வமாக இணைந்து பயணிக்கும். மாகாணசபைத் தேர்தலை இனியும் இந்த அரசாங்கத்தால் காலம் தாழ்த்த முடியாது.
இந்த அரசாங்கம் அரசியலமைப்பிற்கு ஏற்ப செயற்படுவது உண்மையெனில் இவ்வாண்டு மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும். அவ்வாறில்லை எனில் அது அரசாங்கத்தின் தொடர்ச்சியான பயணத்துக்கு சிறந்த பாதையல்ல.
உண்மையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னரே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். எதற்காக தேர்தல் நடத்தப்படவில்லை என்பது தெரியாது. அந்த சந்தர்ப்பத்தில் தேர்தலுக்கான நிதி காணப்பட்டது.
அரசியலமைப்பிற்கமைய செயற்படுவதாகக் கூறிக் கொண்டிருக்கும் இந்த அரசாங்கம் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு பொறுத்தமான ஒருவரை பரிந்துரைக்க தவறியிருக்கிறது. ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்படும் பெயர் அரசியலமைப்பு பேரவையால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஆனால் அவரால் பரிந்துரைக்கப்பட்ட 4 பெயர்கள் அரசியலமைப்பு பேரவையால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
கணக்காய்வு திணைக்களத்துக்கு வெளியிலிருந்து ஒருவரது பெயர் பரிந்துரைக்கப்படுகிறது என்றால், அதற்குள் அடுத்தடுத்த நிலைகளில் பொறுத்தமானவர் இல்லை என்பதே அர்த்தமாகும். இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

No comments: