News Just In

1/27/2026 06:34:00 AM

கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா-2026!

 கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பொங்கல் விழா-2026




கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் மாபெரும் பொங்கல் விழாவானது கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் பட்டிப்பளை பிரதேச அமைப்பாளர்களின் ஏற்பாட்டில் அம்பிளாந்துறை முத்துலிங்க பிள்ளையார் ஆலயத்தில் நேற்றுமுன்தினம் (25) திகதி நடைபெற்றிருந்தது.
ஒற்றுமை, உழைப்பின் மதிப்பு, இயற்கை மீதான மரியாதை போன்றவற்றை பிரதிபலிக்கும் தமிழர்களின் தனித்துவமான மரபுவழி பண்டிகையாக போற்றப்படும் தைப்பொங்கல் விழாவானது, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பினால் பல்வேறு தமிழர் கலை கலாசார நிகழ்வுகளுடன் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் முன்னாள் பிரதி அமைச்சரும், தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவருமான நாகலிங்கம் திரவியம் ( ஜெயம்) பிரதேச சபை உறுப்பினரும் முற்போக்கு தமிழர் கழக இணைப்பாளருமான சந்திரமோகன் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் உள்ளிட்டோர் பிரதம அதிதிகளாக கலந்து கொண்டிருந்ததுடன் கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கூட்டமைப்பில் அங்கம் பெறும் கட்சிகளின் தலைவர் பணிக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பெருமளவான ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

No comments: