யாழில். உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி
யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இந்திய படையினரின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில், இந்திய துணைத்தூதுவர் எஸ். சாய் முரளி அஞ்சலி செலுத்தினார்.
இந்தியாவின் 77ஆவது குடியரசு தினமான நேற்று (26) பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் அமைந்துள்ள இந்திய இராணுவத்தினரின் நினைவிடத்திற்கு இந்திய தூதுவர் உள்ளிட்ட தூதரக அதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.
யாழ்ப்பாணத்தில் 1987ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டு வரையில் விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிரான போர் நடவடிக்கைகளின் போது உயிர் நீத்த இந்திய இராணுவத்தினரின் நினைவாக பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் நினைவுத் தூபி அமைக்கப்பட்டுள்ளது.
1/27/2026 06:27:00 AM
யாழில். உயிர்நீத்த இந்திய இராணுவத்தினருக்கு அஞ்சலி!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: