News Just In

12/09/2025 08:58:00 AM

பலாலியில் அதிரடியாக களம் இறங்கிய அமெரிக்காவின் C130 விமானத்தின் இரகசிய தகவல்கள்.

பலாலியில் அதிரடியாக களம் இறங்கிய அமெரிக்காவின் C130 விமானத்தின் இரகசிய தகவல்கள்..


இலங்கையில் டிட்வா புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து மக்ள் இன்னும் மீளாதுள்ள நிலையில் தற்போதுவரை பல நாடுகள் உதவிகரம் நீட்டிவருகின்றன.

இது மனிதாபிமான செயற்பாடுகளாக இருந்தாலும் ஏதோவொரு வகையில் பூகோள அரசியல் செயற்பாடுகளாகவும் , இராஜதந்திர விடயங்களாகவும் பார்க்கப்படுகின்றன.

அந்தவகையில், இலங்கைக்கு உதவுவதில் ஆரம்பத்தில் அமைதிகாத்த அமெரிக்கா முதலில் நிவாரண தொகையை மட்டுமே அறிவித்திருந்தது.

ஆனால் நேற்றையதினம்(7) அமெரிக்க வான் போக்குவரத்துத் திறன்களை வழங்குவதற்காக, இரண்டு C-130J Super Hercules விமானங்களும் அமெரிக்க விமானப்படையின் 36ஆவது எதிர்பாராத அவசரநிலைகளுக்கான பதிலளிப்புக் குழுவினைச் (CRG) சேர்ந்த விமானப் படை வீரர்களும் இலங்கைக்கு வருகை தந்திருந்தனர்.

இதுவொரு வகையில் இலங்கைகான உதவியாக பார்க்கப்பட்டாலும், இன்றையதினம்(8) யாழ்.பலாலி சர்வதேச விமானத்தில் குறித்த விமானங்கள் தரையிறக்கப்பட்டமையானது சற்று கவனிக்க வேண்டிய விடயமாக மாறியுள்ளது.

ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இந்திய வருகையின் பின்னர் இவ்வாறு அமெரிக்க விடானங்கள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமையானது இந்தியாவிற்கு ஒரு செய்தியை கூறுவது போன்று உள்ளது.

No comments: