ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்
நேற்று ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எமது வைத்திய அதிகாரி Dr.தே.திலக்ஷன் அவர்களின் ஆலோசனைக்கிணங்க மேற்கொள்ளப்பட்டு பிரச்சினைகள் காணப்படும் இடங்களில் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டதோடு சில இடங்களுக்கு சட்டநடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
மீன்கள் இல்லாத கிணறுகளுக்கு மீன்களும் வழங்கப்பட்டு ஒவ்வொரு வீடுகளுக்கும் விழிப்புணர்வுகளும் வழங்கப்பட்டமை குறிப்பிடத் தக்கது.
இந்நிகழ்வில் எமது அலுவலக உத்தியோகத்தர்களுடன் இணைந்து ஆரையம்பதி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் ஆயுள்வேத வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பங்குபற்றினர்.
No comments: