News Just In

12/22/2025 11:36:00 AM

பதுளை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.

பதுளை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு.


நூருல் ஹுதா உமர்

மஹியங்கனை, பங்கரகம்மன கிராமத்தில் அமைந்துள்ள மஹியங்கனை பிரதேச செயலாளர் பிரிவின் ரோஹண, தம்பகொல்ல மற்றும் உடவெல கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அத்தியாவசிய உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலிலும், அக்கட்சியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் அவர்களின் ஏற்பாட்டிலும், நிந்தவூர் மாஸ் பெளண்டேஷன் அமைப்பின் அனுசரணையுடன் குறித்த பிரதேசங்களுக்கு நேரடியாக சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் கையளிக்கப்பட்டன.

பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க அவர்களின் வேண்டுகோளின் பேரில், பங்கரகம்மன மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் முஹம்மட் றிஸ்வான் அவர்களின் தலைமையில் இந்நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, நிந்தவூர் பிரதேச சபை உறுப்பினர்களான ஐ.எல்.எம். ஜாபிர், கே.எம். ஜலீல், எச். அம்ஜத் அலி, எம்.ஜே.எம். ஜுசைல் உள்ளிட்ட நிந்தவூர் பிரதேச முக்கியஸ்தர்கள் பலரும் இப்பணியில் இணைந்து கொண்டிருந்தனர்.

No comments: