
கொழும்பு தங்கச் சந்தையில் தங்கத்தின் விலை இன்று (24) மீண்டும் அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
இதன்படி, 24 கரட் தங்கப் பவுன் (8 கிராம்) ஒன்றின் விலை இன்று 354,000 ரூபாவாகப் பதிவாகியுள்ளது.
நேற்று (23) இதன் விலை 352,000 ரூபாவாகக் காணப்பட்டது.
நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில் இன்று 2,000 ரூபாவினால் விலை அதிகரித்துள்ளது.
அதேபோல, 22 கரட் தங்கப் பவுன் ஒன்றின் விலை இன்று ரூ. 327,500 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று இதன் விலை சுமார் ரூ. 325,600 ஆகக் காணப்பட்டது.
உலக சந்தை நிலவரம்
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4500 அமெரிக்க டொலர்களுக்கும் அதிக பெறுமதியை பதிவு செய்துள்ளது.
வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
வெனிசுலாவில் நிலவி வரும் தீவிர அரசியல் பதற்றங்கள் மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் மேலும் குறைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்புகள் ஆகியவை இந்த அதிரடி விலையேற்றத்திற்கு முதன்மையான காரணங்களாகக் கூறப்படுகின்றன.
No comments: