.jpg)
இலங்கையில் அண்மையில் நிலவிய அதிதீவிர வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்திலிருந்து அடுத்த வாரத்தில் மற்றுமொரு நிவாரண கொள்கலன் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அதிதீவிர வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, தமிழகத்திலிருந்து இதுவரை 4 கொள்கலன்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.ஆடைகள், உலர் உணவுப் பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள், மருந்துகள் மற்றும் சுகாதார மருத்துவ துவாய்கள் உள்ளிட்டவை இந்த நிவாரண கொள்கலன்களில் அடங்குகின்றன.
இந்தநிலையில், மக்களின் தேவைக்கருதி அடுத்த வாரத்தில் மேலும் ஒரு நிவாரண கொள்கலன் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: