பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் நாவிதன்வெளி பிரதேசத்தின் கல்வி முன்னேற்றத்திலும் பிரதேச அபிவிருத்தியிலும், சமூக நல்லிணக்கத்திலும் அதீத அக்கரையுடன் செயற்பட்டு வரும் நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர் பிரதேச சபை உறுப்பினருக்கென கிடைத்த நான்காம் மாத கொடுப்பனவையும் தான் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கமைய வீரத்திடல் பிரதேசத்தில் சொந்த வீடு வசதி அற்ற ஒரு குடும்பத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளார்.
இங்கு கருத்து வெளியிட்ட நளீர் பௌண்டஷன் தலைவரும், நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினருமான அபூபக்கர் நளீர்; தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய இந்த கொடுப்பனவை மக்களுக்கே வழங்கும் நான் எனது பதவிக்கால சகல மாத கொடுப்பனவுகளையும் ஏற்கனவே வழங்கிய வாக்குறுதிக்கு இணங்க பொதுமக்களுக்கே வழங்குவதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்.
No comments: