
தங்களின் மீதான தாக்குதல் நடவடிக்கைளுக்காக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கப்படும் என ஆப்கானிஸ்தான் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஆப்கானிஸ்தான் பயங்கரவாத கும்பலை குறிவைத்து பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 206 பேர் உயிரிழந்தனர்.
இதற்கு பதிலளிக்கும் விதமாக தலிபான் நடத்திய தாக்குதலில் 23 பாகிஸ்தான் இராணுவ வீரர்கள் பலியாகினர்.
இதனையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் மோதல் வெடிக்க கடந்த மாதம் கட்டார் மத்யஸ்தத்தில் தற்காலிக போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
எனினும், நேற்றுமுன்தினம் (07.11.2025) பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லையில் நடந்த மோதலில் 5 ஆப்கன் பொதுமக்கள் உயிரிழந்தனர்.

இந்நிலையில், துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்த பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
No comments: