News Just In

11/09/2025 06:01:00 AM

சிக்குவாரா செல்வம் எம்பி! அடுக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்

சிக்குவாரா செல்வம் எம்பி! அடுக்கப்படும் முக்கிய ஆதாரங்கள்




வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் ஒரு குரல் பதிவு சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த பதிவில், அடைக்கலநாதனுடன் அச்சத்துடன் உரையாடும் நபர் கடந்த மாதம் நீர்கொழும்பில் தற்கொலை செய்துக்கொண்டதாக வெளிவந்த தகவல்கள், சம்பவத்திற்குச் சூடேற்றியுள்ளன.

இதனிடையே, கனடாவில் வசிக்கும் ஒருவர் தமக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறி, எம்.பி செல்வம் அடைக்கலநாதன் யாழ்ப்பாண காவல்நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை சமர்ப்பித்துள்ளார்.

மேலும், அவரின் வாகனம் வவுனியா பகுதியில் மர்மமாக தீக்கிரையாகியுள்ளதுடன், அதுகுறித்தும் காவல்துறையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments: