கல்வி அமைச்சின் சுற்றுநிரூபத்துக்கமைய கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல்-ஜலால் வித்தியாலயத்தின் வாசிப்பு மாத நிகழ்வுகள் ஒக்டோபரில் ஒவ்வொரு வாரமும் படிமுறை ஒழுங்கான நிகழ்வுகளாக இடம்பெற்றது.
அதில் முதல் வார நிகழ்வாக வாசிப்பு மாதத்தை நினைவூட்டும் வகையில் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டதுடன் விசேட காலை ஆராதனையில் வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் பிரதி அதிபர் எம்.எஸ். நபார் அவர்களால் விஷேட சொற்பொழிவு இடம்பெற்றது.
இரண்டாம் வாரம் பாடசாலை நூலகத்தில் ஆரம்பப்பிரிவு மாணவர்களுக்கு வாசிப்புப் போட்டி மற்றும் இடைநிலை மாணவர்களுக்கான கட்டுரைப்போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றது. மூன்றாவது வாரம் மாணவர்கள், ஆசிரியர்களால் பெறுமதியான நூல்கள் பாடசாலை நூலகத்திற்க்கு அன்பளிப்பு செய்யும் நிகழ்வுகள் இடம்பெற்றது.
இறுதி வார நிகழ்வாக வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலான மேடை நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்பட்டது அதில் நாடகங்கள், பேச்சுக்கள், கவிதைகள் என பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வாசிப்பு மாதத்தில் நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபர் டீ.கே.எம். சிராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இறுதி வார நிகழ்வின் பிரதம அதிதியாக இலக்கிய விமர்சகர் சிராஜ் மசூர் அவர்கள் கலந்து கொண்டு போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன் வாசிப்பு மாதம் பற்றி விசேட சொற்பொழிவொன்றை நிகழ்த்தியிருந்தார்.
பாடசாலை நூலக ஆசிரியர் திருமதி திரோஷா பானு அவர்களுடன் இணைந்து நூலக உதவியாளர் நஸ்ரின் ஆகியோருடன் பாடசாலை நூலக குழு ஏற்பாடு செய்த நிகழ்வுகளில் பாடசாலை பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் மற்றும் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்
No comments: