தேசிய வாசிப்பு மாதத்தை ஒட்டி மறுமலர்ச்சிக்காக வாசிப்போம் எனும் தொனிப்பொருளின் கீழ் இடம்பெற்ற போட்டி நிகழ்வுகளில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு 10ம் திகதி திங்கட்கிழமை நாவிதன்வெளி பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் பிரதேச சபை தவிசாளர் இ. ரூபசாந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் எஸ்.எல்.ஏ. கமல் நெத்மி அவர்களும் விசேட அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரக்குமார் அவர்களும் கெளரவ அதிதிகளாக உப தவிசாளர் எம். புவன ரூபன், கெளரவ உறுப்பினர்களான டி.சித்திரக் குமார், எம்.ஏ.நளீர், எம்.பி.யூஜின், எம்.பி.நவாஸ், ஜனாபா.ஏ.எல்.செளதியா ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக பிரதேச சபை செயலாளர் பி.சதீஸ்கரன், சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் ஆய்வு உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளின் உரைகளில் வாசிப்பின் மேன்மை தொடர்பான ஆழமான கருத்துக்கள் இழையோடி இருந்தது. கவிதை, சித்திரம், பேச்சு ,கட்டுரை ஆகிய போட்டிகளில் முதலாம் இரண்டாம் மூன்றாம் நிலைகளைப் பெற்ற மாணவர்கள் பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். நாவிதன் வெளி நூலகத்தின் நூலகர் கே.எம்.சவாஹிர் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெற்றது.
No comments: