News Just In

11/09/2025 05:03:00 PM

கல்முனை பிரதேச 35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா - 2025

கல்முனை பிரதேச 35 வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா - 2025


நூருல் ஹுதா உமர்

கல்முனை பிரதேச செயலக பிரிவின் இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டிகளின் இறுதி நாள் நிகழ்வும், பரிசளிப்பு விழாவும் கல்முனை இளைஞர் கழக சம்மேளன தலைவர் என்.எம். அப்ரின் தலைமையிலும் கல்முனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஏ.எல்.எம். அஸீம் அவர்களின் ஒருங்கிணைப்பில் கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்களின் பங்களிப்புடன் நேற்று (08) சந்தாங்கேணி மைதானத்தில் மிகவும் கோலாகலமாக இடம் பெற்றது.

இந்நிகழ்வில் அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட பணிப்பாளர் டபலியு.ஏ. கங்கா சாகரிக்கா,அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் உதவி பணிப்பாளர் ஏ.முபாரக் அலி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஆர்.எம். சிறிவர்த்தன, கல்முனை பிரதேச செயலக கணக்காளர் கே.எம்.எஸ்.அமீர் அலி , பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம் பளீல், டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நிர்வாக உத்தியோகத்தர்கள் வஹாப் ரிஷாட், எம்.ராஜித், கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலய அதிபர் எம்.எஸ்.அப்துல் றஸாக், றீம் 1st உரிமையாளர் ஜவ்ஸான், அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட சங்கத்தின் தலைவர் எம்.ஐ.எம்.அப்துல் மனாப், கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய சமூக பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி யும் பிரதான பொலிஸ் பரிசோதகருமான ஏ.எல்.ஏ. வாஹிட், அமானா தக்காபுல் உத்தியோகத்தர் எம்.ஏ.கரீம் மற்றும் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இதன் போது இளைஞர் கழக வீரர்களுக்கு சுவட்டு நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் அதில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் வெற்றி கிண்ணங்கள் என்பன அதிதிகளால் வழங்கி வைக்கப்பட்டது.

No comments: