News Just In

11/06/2025 08:37:00 AM

2.5 மீற்றர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழும் சாத்தியம்! பலத்த காற்று, மழை தொடர்பில் அவதானம்

2.5 மீற்றர் உயரம் வரை கடல் அலைகள் மேலெழும் சாத்தியம்! பலத்த காற்று, மழை தொடர்பில் அவதானம்



நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை செய்வதற்கு வளிமண்டலவியல் நிலைமைகள் உகந்ததாகக் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா மற்றும் காலி மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

ஏனைய பிராந்தியங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர் வேகத்தில் மேற்குத் திசையில் இருந்து அல்லது வடமேற்குத் திசையில் இருந்து காற்று வீசும்.

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது சுமார் 2.0 - 2.5 மீற்றர் உயரத்திற்கு மேலெளக்கூடும்.

இக் கடல் பிராந்தியத்தை அண்மித்த கரைப் பிரதேசத்திற்கு கடல் நீர் உட்புகக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments: