News Just In

11/06/2025 08:39:00 AM

தவெக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு - சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

தவெக தலைமையில்தான் கூட்டணி: முதல்வர் வேட்பாளராக விஜய் அறிவிப்பு - சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்



 தமிழகத்​தில் தவெக தலை​மை​யில்​தான் கூட்​டணி அமைக்​கப்​படும். விஜய்​தான் முதல்​வர் வேட்​பாளர் என்று கட்​சி​யின் சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்​டது.

செங்​கல்​பட்டு மாவட்​டம் மாமல்​லபுரத்​தில் நேற்று நடை​பெற்ற தவெக சிறப்பு பொதுக்​குழுக் கூட்​டத்​தில் கட்​சித் தலை​வர் விஜய் பேசி​ய​தாவது: சொல்ல முடி​யாத வேதனை​யிலும், வலி​யிலும் இத்​தனை நாட்​கள் இருந்​தோம். நம் சொந்​தங்​களின் நலன் கருதி மவுனம் காத்​தோம். அமை​தி​யாக இருந்த நேரத்​தில் நம்​மைப் பற்றி வன்ம அரசி​யல் வலை பின்​னப்​பட்​டு, அர்த்​தமற்ற அவதூறுகள் பரப்​பப்​பட்​டன. இவற்றை சட்​டம், சத்​தி​யத்​தின் துணை​யுடன் துடைத்​தெறியப் போகிறோம்.

அரசி​யல் செய்ய விருப்​பம் இல்லை என்று அடிக்​கடி சொல்​லும் முதல்வர் ஸ்டா​லின், நம்​மைக் குறிப்​பிட்டு பல்​வேறு அவதூறுகளை பதிவு செய்​துள்​ளார். சட்​டப்​பேர​வை​யில் எவ்​வளவு வன்​மத்தை கக்​கி​யுள்​ளார்.

இந்​தி​யா​விலேயே எந்த அரசி​யல் கட்​சித் தலை​வருக்​கும் இல்​லாத அதிக கட்​டுப்​பாடு​கள் நமக்கு கொடுக்​கப்​பட்​டிருந்​தன. அரசி​யல் காழ்​ப்புணர்ச்​சி​யுடன், நேர்​மையற்​று, நம்​மைப் பற்றி குற்​றம் சாட்​டி​யுள்ள குறுகிய மனம் கொண்ட முதல்​வரிடம் சில கேள்விகளை முன்​வைக்​கிறேன்.

பொய்​களை​யும், அவதூறுகளை​யும் அவிழ்த்​து​விட்​டு, கோடிகளைக் கொட்டி அமர்த்​தப்​பட்ட வழக்​கறிஞர்கள், திமுக அரசின் தில்​லு​முல்​லுகளால் உச்ச நீதி​மன்​றத்​தில் திணறியதை முதல்​வர் மறந்​து​விட்​டா​ரா? கரூர் சம்​பவத்​துக்​குப் பிறகு அவசர​மாக தனிநபர் ஆணை​யம் அமைக்​கப்​பட்​டது. அந்த ஆணை​யத்​தையே அவம​திப்​பது போல, அரசு உயர​தி​காரி​கள், காவல் துறை அதி​காரி​கள் செய்​தி​யாளர்​களை சந்​தித்​தது ஏன்? இதையெல்​லாம் மறந்​து, சாமர்த்​தி​ய​மாக பேசி​யிருக்​கிறார் முதல்​வர். 50 ஆண்​டு​களாக பொது​வாழ்​வில் இருப்​பவர் இப்​படி பொய் பேசலா​மா? உச்ச நீதி​மன்​றம் தமிழக அரசின் தலை​யில் குட்​டியதை முதல்​வர் மறந்​து​விட்​டா​ரா?

மனி​தாபி​மானம், அரசி​யல், அறம், மாண்பு எது​வுமே இல்​லாமல், வெறும் பேச்​சால் அரசி​யல் ஆட்​டத்தை ஆடத் தொடங்கி விட்​டார் முதல்​வர். நான் கேட்ட கேள்வி​களை, உச்​ச நீதிமன்​றம் கேட்​டுள்​ளது. நீதி​மன்​றத்​துக்கு மட்​டுமல்ல, மக்​களுக்​கும் தமிழக அரசின் மீது நம்​பிக்கை இல்​லாமல் போய்​விட்​டது. 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மக்​கள் இதைப்​புரிய வைப்​பார்​கள்.

நமக்கு வந்த இடையூறுகள் தற்​காலிக​மானவை​தான். அனைத்​தை​யும் தகர்த்​தெறிவோம். மக்​களு​டன் களத்​தில் நிற்​போம். 2026-ல் இரண்டு பேருக்​குத்​தான் போட்​டி. ஒன்று தவெக. இன்​னென்று திமுக. இந்​தப் போட்டி இன்​னும் பலமாக மாறப்​போகிறது. நூறு சதவீதம் வெற்றி வாகை சூடு​வோம். புதிய வரலாறு படைப்​போம். இவ்​வாறு அவர் கூறி​னார்

No comments: