News Just In

11/06/2025 08:34:00 AM

கண்டி பல்லேகலே தீப்பெட்டி தொழிற்சாலையில் பெரும் தீ விபத்து

கண்டி பல்லேகலே தீப்பெட்டி தொழிற்சாலையில் பெரும் தீவிபத்து 



கண்டி, பல்லேகலேயில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் 5ஆம் திகதி புதன்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

தீப்பெட்டி தொழிற்சாலையில் தீப்பெட்டிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கண்டி தீயணைப்புத் துறையைச் சேர்ந்த மூன்று தீயணைப்பு வாகனங்கள் தீயை  அணைத்து வருகின்றன.

பள்ளேகலே காவல்துறையினர் தீ விபத்துக்கான காரணம் மற்றும் ஏற்பட்ட சேதம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments: