திருகோணமலை -ஹொரவ்பொத்தானை பிரதான வீதி 10ம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம் அடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து இன்று (26) இடம் பெற்றுள்ளது.திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கிளினிக் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது இரு நாய்கள் சண்டை செய்து வேகமாக வந்து முச்சக்கர வண்டிக்குள் புகுந்தமையினால் முச்சக்கர வண்டி வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.
விபத்துக்குள்ளானவர்கள் ரொட்டவெவ பகுதியைச் சேர்ந்த கணவன் மனைவி எனவும் தெரியவந்துள்ளது.விபத்து தொடர்பிலான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments: