News Just In

5/17/2025 05:05:00 PM

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை



நூருல் ஹுதா உமர்

2025 ஆம் ஆண்டுக்கான சாய்ந்தமருது கோட்டமட்ட விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் கடந்த வாரம் கல்முனை சாஹிரா கல்லூரி மைதானத்தில் சாய்ந்தமருது கோட்டக் கல்விப் பணிப்பாளர் திருமதி அஸ்மா அப்துல் மலீக் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இந்த போட்டிகளில் ஆர்வத்துடன் பங்குபற்றிய சாய்ந்தமருது கமு/கமு/ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்கள் 16 முதலாமிடங்கள், 14 இரண்டாமிடங்கள்,18 மூன்றாம் இடங்கள் அடங்கலாக மொத்தமாக 48 வெற்றியிடங்களப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

பாடசாலை அதிபர் எம்.ஐ. சம்சுதீன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலின் கீழ் இணைப்பாடவிதான பொறுப்பதிபர் எம்.எப்.எம்.ஆர். ஹாத்தீம் அவர்களின் தலைமையில் பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் எம்.எப்.எம். றிபாஸ், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் என்.எம்.ஏ. ஆபாக் ஆகியோர்களின் அயராத பெரு முயற்சியினால் மாணவர்கள் இவ் வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்ற வீரர்களுக்கும், மற்றும் பயிற்றுவித்த ஆசான்களுக்கும் பாடசாலையின் அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர், ஏனைய ஆசிரியர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

மேற்படி போட்டிகளில் 1ஆம்,2ஆம் இடங்களைப் பெற்றவர்கள் எதிர்வரும் வாரங்களில் நடைபெறவுள்ள வலயமட்ட போட்டிகளில் பங்குபற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: