இந்த நிலையிலே நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2025இல் தமிழரசுக் கட்சி பல்வேறு உள்ளூராட்சி சபைகளில் அதிக ஆசனங்களை பெற்றுள்ளது.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாநகரசபையிலும் பெரும்பான்மையான வாக்குகளை தனதாக்கியுள்ளது.
இந்நிலையில், திருகோணமலை மாநகர சபையின் மேயர் தெரிவிற்கான தமிழரசுக் கட்சி கூட்டம் நேற்றையதினம் நடைபெற்றது.
இதன்போது, தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர் சுமந்திரனும் கலந்து கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டங்கள் ஒவ்வொன்றிலும் குழப்பநிலை இடம்பெறுவதை போல நேற்றைய கூட்டத்திலும், கலந்துரையாடல்களுக்கு இடைநடுவே குழப்பநிலை ஏற்பட்டுள்ளது
No comments: