
பொது மக்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் முதன்மை சுகாதார பாதுகாப்பு வசதிகளை வழங்குவதற்காக தேசிய மட்ட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த திட்டம் (14) ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அதன்படி “கிளீன் ஸ்ரீலங்கா” ஜனாதிபதி செயலணி, வலுசக்தி அமைச்சு மற்றும் நாட்டின் நான்கு பிரதான எரிபொருள் விநியோகத்தர்களான இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் (CPC), லங்கா IOC PLC (LIOC), சினொபெக் எனர்ஜி லங்கா (தனியார்) நிறுவனம் மற்றும் RM பார்க்ஸ் (தனியார்) நிறுவனங்களுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) இதன்போது கைச்சாத்திடப்பட்டது.
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களை, சுத்தமான, பாதுகாப்பான மற்றும் பலவீனமானவர்கள் இலகுவாக அணுகக்கூடிய வகையில் சுகாதார பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய இடங்களாக மாற்றும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
அதன்படி மூன்று வருட காலத்துக்குள் பொதுமக்களுக்காக நவீன சுகாதார பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய 540 இடங்களை அமைக்க எதிர்பார்க்கப்படுகிறது.
அவற்றில் 100 இடங்களை 2025ஆம் ஆண்டுக்குள் முழுமைப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments: