சம்மாந்துறை அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 24வது வருடாந்த பொதுக் கூட்டமும்,2025/2026ம் வருடத்திற்கான புதிய நிர்வாகிகள் தெரிவு செய்யும் கூட்டம் அதன் தலைவர் ஏ.எல்.எம் யாஸீன் (ஜே.பி) தலைமையில் இன்று(17) சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மத் ஹனீபா கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அரச சேவை ஓய்வூதியர் நம்பிக்கை நிதியத்தின் 2025/2024 ஆண்டுக்கான புதிய தலைவராக ஓய்வு பெற்ற மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஏ.உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டதுடன் செயலாளராக ஓய்வு பெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தர் ஏ.எம் இல்யாஸ் அவர்களும்,பொருளாளராக ஏ.எம்.ஏ காதர் அவர்களும், உப தலைவராக எம்.எம் சலீம்,உப செயலாளராக ஏ.புவனேந்திரனும் தெரிவு செய்யப்பட்டதுடன் நிர்வாக உறுப்பினர்களாக எம்.அலியார்,ஏ.எம் ஹுசைன்,ஐ.எம் இப்றாஹீம்
ஏ.எம் முஹம்மட் பரிட் ஆகியோர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர் கருத்து தெரிவிக்கையில்..
அரசாங்கத்தினால் தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டம் அதேபோல அபிவிருத்தி சார்ந்த வேலைத்திட்டங்கள் ,வாழ்வாதார மேம்பாட்டு வேலைத்திட்டங்களின் உங்கள் ஒவ்வொருவரின் அனுபவசார் பங்களிப்புகளையும், ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். என்பதோடு தற்போது கிராம மட்டத்தில் நடைபெற்றுவரும் கிராமிய அபிவிருத்தி திட்டம்(VDP) தயாரிப்பதிலும் தங்களின் கருத்துக்களும்,ஆழமான சிந்தனைகளும் பழைய அனுபங்களையும்,முழுமையான ஒத்துழைப்புகளையும் வழங்க வேண்டும். அவ்வாறு நீங்கள் ஒத்துழைப்புகள் வழங்கும் போது இச் செயற்திட்டங்கள் வலுவானதாகவும் சிறப்பானதாகவும் காணப்படும். எனவும் குறிப்பிட்டார்.
மேலும் ஓய்வூதிய சமூகத்தை கட்டுக்கோப்பாக வைத்து அவர்களின் நலன்களில் அக்கறை செலுத்துவதோடு, ஓய்வூதியம் பெற்றவர்களில் நல்ல வளவாளர்கள்,துறைசார் வல்லுனர்கள் என பலதரப்பட்டவர்கள் உள்ளனர். அவர்களையும் ஒருங்கிணைத்து இவ் ஓய்வூதிய நிதியம் திறன்பட செயற்பட வேண்டும்.என்பதோடு சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவில் இதுவரை அரசாங்கத்துனால் ஓய்வூதியம் பெறுகின்றவர்களில் சிவில் ஓய்வூதியம் 708 பேரும்,விதவை ஓய்வூதியம் 301பேரும் மொத்தமாக 1009 பேர் ஓய்வூதியம் பெறுகின்றனர் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.
இந் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல் சர்தார் மிர்ஸா,ஓய்வூதிய அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஐ.எல் பிரோஸா கே.எல்பயீஸா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
No comments: