News Just In

8/25/2025 10:12:00 AM

26ஆம் திகதி ரணிலுக்கு நடக்கப்போவது என்ன! வெளியான முக்கிய தகவல்.

26ஆம் திகதி ரணிலுக்கு நடக்கப்போவது என்ன! வெளியான முக்கிய தகவல்...


கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸின் வாதத்தின் படி, எதிர்வரும் 26ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு பிணை வழங்கப்படும் வாய்ப்பு அரிதாக இருப்பதாக சட்ட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

திலீப பீரிஸின் வாதத்தின் இறுதியில் தராதரம் பாராது முடிவை எடுங்கள் என நீதிபதியிடம் வலியுறுத்தியிருந்தார்.

அத்துடன், மேலும் பலர் கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இவை, ரணிலுக்கு பிணை கிடைக்கும் வாய்ப்பை மேலும் குறைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுச் சொத்து சட்டத்தின் கீழ் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு பிணை வழங்க வேண்டாம் என முக்கியமானதொரு வாதத்தை திலீப பீரிஸ் முன்வைத்ததோடு எதிர்வரும் 26ஆம் திகதியும் இதே வாதம் முன்வைக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

No comments: