
எதிர்க்சட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்த காலத்தில் நடந்ததாக கூறப்படும் மோசடி தொடர்பாகவே இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த முறைப்பாட்டை தாக்கல் செய்த தரப்பினர், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஊழியர்கள் குழுவொன்று சஜித்தின் மனைவியான ஜலனி பிரேமதாசவுக்குச் சொந்தமான ஒரு தனியார் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டதாகக் கூறியுள்ளனர்.
அதன்போது, தொடர்புடைய பத்தொன்பது அரசு ஊழியர்கள் தங்கள் தனிப்பட்ட வேலைகள், மனைவியின் வேலை மற்றும் பொறியியல் கூட்டுத்தாபனத்தின் வேலையுடன் தொடர்பில்லாத அவரது அரசியல் வேலைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இது குறித்து லஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments: