தென்கிழக்கு பல்கலைக்கழக பணியாளர் மேம்பாட்டு நிலையமும் தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் (NILET) இணைந்து நடாத்திய சிங்களம் மொழி (இரண்டாவது அதிகாரப்பூர்வ மொழி) கற்கை நெறியைப் பூர்த்திசெய்தவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் கலை நிகழ்ச்சியும் பலகலைக்கழகத்தின் தொழில்நுட்பவியல் பீடத்தின் கேட்போர்கூடத்தில் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எச்.எம். நிஜாம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பதில் உபவேந்தர் கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். கற்கை நெறியின் இணைப்பாளர் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபாரின் வழிகாட்டலில் இடம்பெற்ற இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் பிரதிப்பணிப்பாளர் கயன் பொதுப்பிடிய கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டார்.
விசேட அதிதிகளாக முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா, பொறியியல் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.ஏ.எல்.ஏ. ஹலிம், இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் பீடாதிபதி அஷ் ஷேய்க் எம்.எச்.ஏ. முனாஸ், கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் மற்றும் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் முன்னிலை அதிதிகளாக தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி அலுவலர் தேசகீர்த்தி தங்கராஜ் கல்யாணி மற்றும் வளவாலர்கலான ஜெ. ஏ. சனத் ஜயசிங்க, சரோஜா தேவநாயகம், எம். யசோதர்னி ,ஜெ. கல்பணி மற்றும் எஸ்.எம். ஜுவல்லரியின் உரிமையாளர் எஸ்.எம். றிப்னாஸ், எஸ்.எம்.எம். அப்சார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
"அரசகரும மொழிக் கொள்கை ஊடாக இலங்கை பிரஜைகளுக்கு மகிழ்ச்சிகரமான சேவை " எனும் தொனிப்பொருளின் கீழ் பல்கலைக்கழக ஊழியர்கள் தங்கள் கடமைகளை இலகுவில் ஆற்றும் பொருட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகம் தேசிய மொழிக் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனமும் இணைந்து இவ்வாறான கற்கை நெறிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது
No comments: