முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் கைதை தொடர்ந்து பல விடயங்கள் வெளிவருவதோடு சில அரசியல் பிரமுகர்களும் இந்த கைதை மேற்கொள்காட்டி கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, பிள்ளையானுக்கு இராணுவத்தினருக்கும் எந்த தொடர்பும் இல்லையென்றும், தமிழீழ விடுதலைபுலிகள் அமைப்பை தோற்கடிப்பதற்கு எந்த தகவலையும் கூறவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திற்கு உளவுதகவலை தந்ததாக கூறப்படுவது பொய் என்று சரத் பொன்சேகா கூறுகின்ற நிலையில், சரத் பொன்சேகாவின் இந்த கூற்று பொய் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.
இராணுவபுலனாய்வுபிரிவின் முக்கிய அதிகாரியாக இருந்த சுரேஷ் சலேவுக்கும் பிள்ளையானுக்கும் தொடர்புகள் இருந்ததாக பேசப்பட்ட நிலையில் அவற்றுக்கான ஆதாரங்கள் தற்போது குற்றப்புலனாய்வு பிரிவினரால் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
பிள்ளையான் கடந்த வருடம் நவம்பர் மாதம் குற்றப்புலனாய்வுதுறையில் பிரசன்னமாகியிருந்தார், ஆனால் அதற்கு முன்னர் அவர் அழைக்கப்பட்ட போது அவர் பிரசன்னமாகவில்லை.
அதற்கு அவருக்கு பிள்ளையானுக்கு தடையுத்தரவு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டு அது விமானநிலையத்தில் வழங்கப்பட்டது.
இந்த தடையுத்தரவு பிள்ளையானுக்கு மட்டுமில்லாமல் சுரேஷ் சலேவுக்கும் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
No comments: