News Just In

4/09/2025 05:51:00 AM

பிள்ளையான் கைது: மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்!


பிள்ளையான் கைது: மட்டக்களப்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்



தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடியில் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சி வெளியிடப்பட்டுள்ளது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் இளைஞர்களினால் நேற்று (8) மாலை பட்டாசு கொழுத்தப்பட்டுள்ளது.

பிள்ளையான் கட்சி தலைமை காரியாலயத்தில் வைத்துநேற்று  (8) கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பிலிருந்து வருகை தந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், கைதுக்கான காரணங்கள் ஏதும் இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: