புலிபாய்ந்தகல்லில் சட்டவிரோத மீன்பிடி குடிசைகளை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் வலியுறுத்தல்; வாடியை அகற்றுமாறு பிரதேசசெயலர் அறிவிப்பு

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள, புலிபாய்ந்த கல் பகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக மீனவ வாடிகளை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் அனுமதிகள் எவற்றையும் பெறாது அத்துமீறி பெரும்பான்மை இனத்தவர்களால் அமைக்கப்பட்ட வாடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியநிலையில், கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் மஞ்சுளாதேவி சதீசன் குறித்த பகுியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள வாடிகளை அகற்றுமாறு குறித்தபகுதியில் வெள்ளிக்கிழமை (11) அறிவித்தலைக் காட்சிப்படுத்தியுள்ளார்.

அத்தோடு அப்பகுதியில் அத்துமீறி வாடி அமைத்த சந்தேகநபராக இனங்காணப்பட்ட W.L.நிசாந்த என்னும் பெரும்பான்மை இனத்தவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கரைதுறைப்பற்றுபிரதேசசெயலாளர் தெரிவித்துள்ளார்.
No comments: