வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் எமக்கு. நிரந்தர வாழ்வாதாரம் இல்லாமல். யுத்தத்தாலும் அனர்த்தங்களிலும் சீரழிந்து. நிரந்தர வாழ்வு வாழ்வாதாரம் இல்லாத நிலையில் இருக்கும் எமது பூர்வீக காணிகளை பறித்து எடுப்பதற்கு. வன திணைக்களங்கள் முயற்சி செய்தால். அதிகாரம் படித்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும். தடுத்து நிறுத்த முன் வர வேண்டுமென. மட்டக்களப்பு புல்லுமலை பிரதேச பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
கட ந்த இரு வாரங்களாக. வனஇலாகா எமது பூர்வீக விவசாய காணிகளை. எமது விவசாய நடவடிக்கைகளுக்கு தரப்பட்ட காணிகளை பறித்தெடுக்க்கும் முயற்சிகளை தடுப்பதற்கு நாங்கள் பல அரசியல்வாதிகள் அதிகாரிகளை நாடிய போதும் கை கூடவில்லை .
எனினும். தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களின் கவனத்தைக் கொண்டு வந்த இடத்தில் எமக்கு இன்று. வனவிலா காணிகளை பறிக்கும் எல்லையிடும் நடவடிக்கை நிறுத்தப்பட்டதையிட்டு தாம் தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தனர்.
இது பற்றி தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் கே.திலகநாதன் கருத்து வெளியிடுகையில். விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் மக்களின் பூர்வீக கா ணிகளை பறித்து எடுப்பதற்கு அரச திணைக்களங்களும் அரச அதிகாரிகளோ முயற்சி செய்தால் அரசாங்கம் என்ற வகையில் ஒருபோதும் நாம் அனுமதிக்க போவதில்லை.
எதிர்காலத்தில். 40 ஏக்கர் கிராமம் .அம்பஹகவத்த நாவலடி. பிரதேச மக்களுக்கு. நமது விவசாய நடவடிக்ககைகளுக்கு தேவையான காணிகளை குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொடுப்பதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நடவமடிக்கை எடுக்குமெனத்தெரிவித்தார்
No comments: