தந்தையை இழந்து வறிய கோட்டின் கீழ் வாழ்கின்ற பிள்ளைகளும் சிறந்து விளங்க வேண்டும்!சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இஸ்ஸடீன் தெரிவிப்பு!
பொத்துவில் பிரதேசத்தில் தந்தையை இழந்து வறிய கோட்டின் கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் பிள்ளைகளும் ஏனைய பிள்ளைகளைப் போன்று கற்றல் மற்றும் விளையாட்டுத்துறை போன்ற செயற்பாடுகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கில் பல முன்னெடுப்புகளை முன்னெடுத்து வருகின்றோம் என்று அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியும், கழகத்தின் பிரதம ஆலோசகரும், சமூக சேவையாளருமான வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் தெரிவித்தார்.
பொத்துவில் மத்திய விளையாட்டுக் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், தந்தையை இழந்து
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் பிள்ளைகளுக்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை இருந்தாலும்
அவர்களின் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்வியை இடைநடுவில் நிறுத்திவிட்டு பெரும்பாலும் வேலைக்கமர்த்தப்படுகின்றனர். அந்தப் பிள்ளைகள் நன்கு கவனிக்கப்பட வேண்டியவர்களாக இருக்கின்றனர்.
மேலும், பாடசாலை செல்லாமல் இருக்கும் பிள்ளைகளுக்கான கல்வி பெறும் உரிமை கட்டாயம் அளிக்கப்பட வேண்டியுள்ளது. அவர்களின் வளர்ச்சி, விருத்திக்கு அவசியமான சுகாதார நலனோம்பல் விடயங்களும் கருத்திற் கொள்ளப்பட வேண்டும் என்றார்.
தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்த 50 வரிய குடும்பங்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பதற்கான நிதியுதவியை அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரியும், கழகத்தின் பிரம ஆலோசகரும், சமூக சேவையாளருமான வைத்தியர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன் அவர்களின் சொந்த நிதியில் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
No comments: