News Just In

3/28/2025 12:56:00 PM

விஜயன் விஜயகுமாரி சமாதான நீதவானாக நியமனம்!

விஜயன் விஜயகுமாரி சமாதான நீதவானாக நியமனம்



காரைதீவைச் சேர்ந்த திருமதி விஜயன் விஜயகுமாரி அகில இலங்கை சமாதான நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அண்மையில் அம்பாறை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி நவோமி விக்ரமரத்ன முன்னிலையில் சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்

காரைதீவு ஒன்பதாம் பிரிவை சேர்ந்த அமரர்களான வடிவேல் மகேஸ்வரி தம்பதியினரின் புதல்வியான இவர் சமூக சேவையாளராகவும் திகழ்கிறார். தனது ஆரம்பக் கல்வியை காரைதீவு விக்னேஸ்வரா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை கல்முனை இராமகிருஷ்ண மிஷன் பாடசாலையிலும் கற்றார். இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஊழியராகவும் இப்போது கடமையாற்றி வருகிறார்

No comments: