கைப்பற்றுவோம்!உதுமான்கண்டு நாபீர் உறுதி
(அபு அலா)
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சம்மாந்துறை பிரதேச சபையை இலக்காகக் கொண்டு களமிறங்கியுள்ள நாபீர் பவுண்டேஷன் சுயேட்சைக் குழு சம்மாந்துறை பிரதேச சபையை அறுதிப் பெரும்பான்மையினால் கைப்பற்றுவோம் என்று அதன் தலைவர் பொறியியலாளர் கலாநிதி உதுமான் கண்டு நாபீர் தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவினை (19) நாபீர் பவுண்டேஷனின் அரசியல் செயற்பாட்டாளர் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.துல்கர் நயீம் கொண்ட குழுவினர் இன்று அம்பாறை மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சியாளர் அலுவலகத்தில் வேட்பு மனுவை கையளித்துள்ளனர்.
இதுதொடர்பில், சுயேட்சைக் குழுவின் தலைவர் உதுமான் கண்டு நாபீர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வருகின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசிய கட்சிகள், சிறுபான்மை கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களென கூடுதலான கட்சிகள் களமிறங்கியுள்ள இந்நிலைமையில், எமது சுயேட்சைக் குழு அறுதிப் பெரும்பான்மையினால் சம்மாந்துறைப் பிரதேச சபையை கைப்பற்றும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது என்றும் அவர் திட்டவட்டமாக குறிப்பிட்டார்.
கடந்த 32 வருட காலமாக எந்த எதிர்பார்ப்பின்றி நாங்கள் செய்த சேவை நிமித்தம், இன்று மக்களிடம் ஆணையைக் கேட்டு நிற்கின்றோம். இனம், மதம் கட்சி, வேதம் பாராமல் பரவலாக மக்களுக்கு செய்த சேவைகளின் அடிப்படையில் சம்மாந்துறை பிரதேச சபையை மையமாகக் கொண்டே நாங்கள் களமிறங்குகின்றோம். இதன் வெற்றியின் அடிப்படையில் எதிர்வருகின்ற காலங்களில் எமது அரசியல் பரலடைந்து இன்னும் பல சேவைகளை எமது மக்களுக்கு வழங்கவுள்ளோம்.
கடந்த கால சேவைகளை அரசியலின் அடிப்படையில் வியாபிக்க வேண்டும் என்பதை எமது பூரண இலக்காகக் காணப்படுகின்றது. அதற்காக எனது மக்கள் எனக்கான அரசியல் அதிகாரத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கின்றது என்றார்

No comments: