News Just In

3/20/2025 12:00:00 PM

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலய வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் !

கல்முனை இஸ்லாமாபாத் மகா வித்தியாலய வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் !


நூருல் ஹுதா உமர்
கல்முனை கல்வி வலய கல்முனை நகர கமு/கமு/ இஸ்லாமாபாத் மகா வித்தியாலய வருடாந்த இப்தார் ஒன்றுகூடல் நிகழ்வு ஆசிரியர் நலன்புரி குழுவின் ஏற்பாட்டில் பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாட் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ரமழான் சிந்தனையை பாடசாலை ஆசிரியர், மௌலவியுமான அஷ்ஷேக் ஜே.எம். நௌபாஸ் (நளீமி) நிகழ்த்தினார்.
இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கல்முனை கல்வி வலயத்தின் பணிப்பாளர் எம்.எஸ் .சஹுதுல் நஜீம் அவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் மேலும் உலமாக்கள், அம்பாறை மாவட்ட பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹிர், கல்முனை வலயக் கல்வி அலுவலக கணக்காளர் கே. லிங்கேஸ்வரன், கல்முனை கல்வி வலயத்தின் முன்னாள் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், பிரதி கல்வி பணிப்பாளர் களான எம்.எச். ஜாபிர், ஏ.எச்.எம். பௌஸ், கோட்டக்கல்வி பணிப்பாளர் யூ.எல்.எம். றியால், ஓய்வு பெற்ற பிரதி கல்வி பணிப்பாளர் ஏ.எல்.எம். முக்தார், கல்முனை பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர், கல்வி மான்கள், பிரதேச சிவில் அமைப்புக்களின் பிரதானிகள், அண்மைய பாடசாலை அதிபர், பாடசாலை யின் பிரதி, உதவி அதிபர்கள் , பகுதி தலைவர்கள், ஆசிரிய ஆசிரியைகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கல்விசாரா ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: