News Just In

3/17/2025 09:47:00 AM

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டின் மூலம் வாழ்வாதார உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு!

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டின் மூலம் வாழ்வாதார உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு.


நூருல் ஹுதா உமர்

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் வருடா வருடம் வழங்கி வருகின்றே வாழ்வாதார உலர் உணவு மற்றும் பேரீச்சம் பழப் பொதிகளை வழங்கும் நிகழ்வு இன்று (16) பவுண்டேசனின் தலைமைக்காரியாலயத்தில் கல்முனை மாநகரசபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இவ் வாழ்வாதார உலர் உணவு பொதிகளை CSWMA மற்றும் YWMA நிருவனங்கள் அனுசரணை வழங்கியதுடன் மற்றும் ஒரு தொகை பேரீச்சம் பழங்களை அல் ஹிக்மா நலன்புரி அமைப்பினரும் வழங்கி இருந்தனர். மேலும்
இந்நிகழ்விற்கு முன்னாள் கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிஷார், கல்முனை பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம்.முகம்மது ஜெய்ஷான் மற்றும் உலமாக்கள், பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள், பயனாளிகள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்

No comments: