News Just In

3/10/2025 12:57:00 PM

கிழக்கில் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் மருத்துவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கின்றார்!

கிழக்கில் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் மருத்துவர் தன்மீதான குற்றச்சாட்டுகளை மறுக்கின்றார்- எக்கனமி நெக்ஸ்ட்


இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் இஸ்லாமிய தீவிரவாத குழுவுடன் தொடர்புவைத்திருக்கின்றார் என அதிகாரிகள் சந்தேகிக்கும் மருத்துவர் ஒருவர் தன்மீதான சந்தேகங்களை நிராகரித்துள்ளார்.

தனக்கு வன்முறை நோக்கம் உள்ளதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள அவர் தான் சட்டத்தை மீறியிருந்தால் அரசாங்கம் தன்னை கைதுசெய்யலாம் என தெரிவிக்கின்றார்.

அவர் தீவிரவாதம் குறித்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார் ஆனால் அந்த பகுதி மக்கள் அவரும் அவரை பின்பற்றுபவர்களும் வழக்கத்திற்கு மாறான கருத்துக்களை கொண்டுள்ளனர் இது அப்பகுதியில் உள்ள முக்கிய முஸ்லீம் குழுவுடன் மோதலிற்கு வழிவகுத்துள்ளது என தெரிவிக்கின்றனர்.

2019 ம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் இலங்கையின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் ஈடுபட்டதை தொடர்ந்து அந்த பகுதி அதிகாரிகளின் கவனத்தின் கீழ் வந்துள்ளது.

கல்முனை வடக்கு மருத்துவமனையில் உள்ள மனநல பிரிவின் மருத்துவர் கல்முனையில் சுப்பர் முஸ்லீம்கள் என்ற குழுவிற்கு தலைமை தாங்குவதாக தெரிவிக்கப்படுவதை மறுத்தார்.

இது வெறும் அர்த்தமற்ற குற்றச்சாட்டு,நான்சட்டங்களை மீறியிருந்தால் பாதுகாப்பு தரப்பினர் என்னை கைதுசெய்யலாம் என அவர் தெரிவித்தார்.

எனது நடத்தை குறித்து எந்த விசாரணைகளையும் எதிர்கொள்ள தயார் என அவர் தெரிவித்தார்.

சாரம் அணிந்தநிலையில் காணப்பட்ட ஸ்ரீஜெயவர்த்தனபுர மருத்துவபீட பட்டதாரியான 51 வயது மருத்துவர் சுப்பர் முஸ்லீம் அமைப்புடன் தனக்கு எந்த தொடர்புமில்லை என தெரிவித்தார்.

2019 இல் மற்றுமொரு இஸ்லாமிய அமைப்புடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக சிலர் தனது பெயரை சுப்பர் முஸ்லீம் அமைப்புடன் தவறுதலாக தொடர்புபடுத்தியுள்ளனர் என அவர் குறிப்பிட்டார்.

நாங்கள்ஒரு அமைப்பில்லை,எங்;களிற்கு தப்லீக் ஜமா அத் என்ற அமைப்புடன் கருத்துவேறுபாடு எழுந்தவேளை நாங்கள் சுப்பர் முஸ்லீம்கள் என முத்திரை குத்தப்பட்டோம் என அவர் குறிப்பிட்டார்.

நிலத்தில் சேர்ட் அணியாமல் அமர்ந்திருந்த அவரை சுற்றி அவரது 15 வயது மகன் உட்பட அவரை பின்பற்றும் மூவர் காணப்பட்டனர்.

பிரதான இஸ்லாமிய அமைப்புகளின் கருத்துக்களை விட எனது கருத்துக்களுடன் உடன்படுவதால் பலர் என்னிடம் வந்துள்ளனர் என அவர் தெரிவித்தார்.

இஸ்லாத்தின் ஆன்மீக தன்மை தொடர்பான கருத்துக்களே பிரதான இஸ்லாமிய இயக்கத்துடன் இவர் முரண்படும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.இவர் பொருள்முதல்வாதத்தை விட ஆன்மீகத்தை அதிகம் ஆதரிக்கின்றார்.

No comments: