சாய்ந்தமருது பிரதேச சமூக அபிவிருத்தி அமைப்பின் இரண்டாவது ஆண்டு நிறைவும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் அமைப்பின் தலைவர் ஐ. ஜாபீர் தலைமையில் சாய்ந்தமருது ரியாலுல் ஜன்னா வித்தியாலய கேட்போர் கூடத்தில் 2025.02.01 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பொலன்னறுவை மாவட்ட சிரேஷ்ட நீர்ப்பாசன பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். கௌரவ அதிதிகளாக இன்ஜினியரிங் கன்சல்டன்சி இன் நிறைவேற்று பணிப்பாளர் எம்.யூ.எஸ். நியாஸ் மற்றும் வுரவ்ன் வூட் ரெசிடன்ஸ் உரிமையாளர் எம்.எச். முகம்மட் நாசர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக கேபிடல் எவ்.எம். சிரேஷ்ட முகாமையாளர் ஏ.எல்.ஜாபீர், பிறை எவ்.எம். ஏ.ஆர்.எம். நௌபீல், EXMPS மற்றும் UOPSF ஆகியவற்றின் நிறைவேற்று பணிப்பாளர் ஏ.ஜி. இக்பால் மற்றும் சாய்ந்தமருது சமூக சேவை உத்தியோகத்தர் ஏ.ஆர். ரேஷ்மி மற்றும் எம்.யூ.எஸ். நிஜாம் ஆகியோர் பங்கு கொண்டிருந்தனர்.
மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
No comments: